வந்தே பாரத் மிஷனின் 2 வது கட்டத்தில் கூடுதல் விமான சேவை - வளைகுடா நாடுகளில் விமான சேவை இன்று தொடங்குகிறது

வந்தே பாரத் மிஷனின் 2 வது கட்டத்தில் கூடுதலாக விமானங்களை இயக்கும் சேவை இன்று தொடங்குகிறது.
வந்தே பாரத் மிஷனின் 2 வது கட்டத்தில் கூடுதல் விமான சேவை - வளைகுடா நாடுகளில் விமான சேவை இன்று தொடங்குகிறது
x
வந்தே பாரத் மிஷனின் 2 வது கட்டத்தில் கூடுதலாக விமானங்களை இயக்கும் சேவை இன்று தொடங்குகிறது. கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊடரங்கு காரணமாக விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு வந்தே பாரத் மிஷன் என்ற திட்டத்தை தொடங்கியது. முதல் கட்டம் மற்றும் 2வது கட்டத்தில்  ஏராளமானோர் வீடு திரும்பிய நிலையில், வந்தே பாரத் மிஷனின் 2வது கட்டத்தில் கூடுதலாக விமானங்கள் இயக்குவது இன்று தொடங்குகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து சுமார் 140 விமானங்களில் 23 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இந்தியாவுக்கு வர உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்