சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்
x
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தொழில்துறையினருடன் காணொலி காட்சியில் பேசிய அவர், பொதுத்துறை நிறுவனங்கள்  நிலுவை வைத்துள்ள தொகைகள்  45 நாட்களில் அளிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மாநில அரசின் நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும் தாங்கள் நிலுவை வைத்துள்ள தொகையை , உடனடியாக சிறு குறு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும் என்றும் கட்கரி வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்