பீர், பிராந்தி, விஸ்கி விலை உயர்வு - சாராய கடைகளில் குவிந்த தமிழக மதுப்பிரியர்கள்

பிராந்தி, விஸ்கி விலை உயர்வால் காரைக்காலில் திறக்கப்பட்ட சாராய கடைகளில் தமிழக மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்தனர்.
பீர், பிராந்தி, விஸ்கி விலை உயர்வு - சாராய கடைகளில் குவிந்த தமிழக மதுப்பிரியர்கள்
x
பிராந்தி, விஸ்கி விலை உயர்வால், காரைக்காலில் திறக்கப்பட்ட சாராய கடைகளில் தமிழக மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்தனர். கொரோனா வரியுடன் இன்று புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து காரைக்காலில் உள்ள 100க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. இந்நிலையில், மது விலைகள் உயர்வால், அரசு மற்றும் தனியார் மதுக்கடைகளில் கூட்டம் இல்லாமல் இருந்தது. இதனிடையே, காரைக்கால் - நாகை எல்லையான வாஞ்சூரில், சாராய கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அங்கு கூட்டம் கூட தொடங்கியது. வாஞ்சூரை சுற்றியுள்ள தமிழக மதுப்பிரியர்களும் அங்கு அதிகளவில் குவிந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்