மும்பையில் இருந்து தமிழகம் வர இருந்த ரயில் ரத்து - ரயில் நிலையத்தில் காத்துக்கிடந்த தமிழக மக்கள் கொதிப்பு

மும்பையில் இருந்து தமிழகம் வருவதற்கு ரயில் நிலையத்தில் தமிழக மக்கள் காத்துக்கிடந்த நிலையில், ரயில் ரத்து செய்யப்பட்டது.
மும்பையில் இருந்து தமிழகம் வர இருந்த ரயில் ரத்து - ரயில் நிலையத்தில் காத்துக்கிடந்த தமிழக மக்கள் கொதிப்பு
x
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரை சிறப்பு ரயில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு புறப்பட இருந்த‌து. தாராவி  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த ரயிலில் பயணிக்க இருந்தனர். ஆனால்,  மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதால், அங்கிருந்து ரயில் தமிழகம் வருவதற்கு, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ரயில் ரத்து செய்யப்படுவதாக‌ அறிவிக்கப்பட்டதால், பல மணி நேரமாக ரயில் நிலையத்தில் காத்துக்கிடந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் ஆத்திரமடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்