பல்வேறு முகங்களை பதித்து தயாரிக்கப்படும் முக கவசங்களுக்கு வரவேற்பு...

பல்வேறு முகங்களை பதித்து தயாரிக்கப்படும் முக கவசங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
பல்வேறு முகங்களை பதித்து தயாரிக்கப்படும் முக கவசங்களுக்கு வரவேற்பு...
x
முக கவசம் இப்போது நமக்கு அத்தியாவசியமாக மாறியிருக்கும் நிலையில் அதிலும் விதவிதமான மாடல்களை தேடி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஏட்டுமனூரை சேர்ந்த வினிஸ் என்பவர் இந்த முயற்சியை கையில் எடுத்திருக்கிறார். டீ கப்களில் ஒருவரின் புகைப்படங்களை பதிக்கும் தொழில்நுட்பத்தை பின்பற்றி முக கவசங்களிலும் புதுமையை புகுத்தி இருக்கிறார். இதற்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக இருக்கவே ஏராளமானோர் இதனை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 15 நிமிடங்களில் இந்த முக கவசத்தை தயாரித்து வழங்கும் இவர், 60 ரூபாய் கட்டணத்தில் செய்து கொடுக்கிறார். இந்த வித்தியாசமான முக கவசம் இப்போது பெருமளவில் டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது. 

--

Next Story

மேலும் செய்திகள்