விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு...

நாடு முழுவதும் வரும் 25 ந்தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு...
x
விமான சேவைகள் அனைத்திற்கும் 7 வகையான சிறப்பு கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை வழக்கமான கட்டணத்திலிருந்து உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

* சென்னையிலிருந்து 2 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்தில் பெங்களூரு, கோவைக்கு விமானம் மூலம் செல்லலாம். 

* இதேபோல் 2 ஆயிரத்து 500 முதல் 7ஆயிரத்து 500 ரூபாய் வரையிலான விமான கட்டணம் செலுத்தி பயணிகள் ஐதராபாத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், கொச்சி, மங்களூர், கோழிக்கோடு ஆகிய நகரங்களுக்கு செல்ல முடியும். 

* 3 ஆயிரம் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்தில் புவனேஸ்வர், கோழிக்கோடு, கோவா, கொச்சி, கொல்கத்தா, நாக்பூர், புனே, ஐதராபாத்  ஆகிய நகரங்களுக்கு விமானம் மூலம் செல்லலாம்

* 3 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ருபாய் வரையிலான கட்டணத்தில்  இந்தூர், மும்பை, ராய்பூர், கொல்கத்தா மற்றும் அந்தமானுக்கு  விமானத்தில் செல்ல முடியும். 

* இதேபோல் 4 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்தில் டெல்லி, ஜெய்பூர், லக்னோ, மங்களூர், பாட்னா, வாராணசிக்கு செல்லலாம்.   

* 5 ஆயிரத்து 500 முதல் 15ஆயிரத்து 700 ரூபாய் வரையிலான கட்டணத்தில் கவுகாத்தி, வாரணாசி ஆகிய நகரங்களுக்கு செல்ல முடியும். 

* விமான பயணிகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  காய்ச்சல், மூச்சு திணறல், இருமல் இருக்கும் பயணிகள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* பயணிகள் ஆன்-லைனில் செக்-இன் செய்து போர்டிங் பாஸை வீட்டில் இருந்தே கொண்டு வர வேண்டும் என்றும், விமான நிலையத்தில் டிக்கெட், போர்டிங் பாஸ், அடையாள அட்டை ஆகியவற்றை பாதுகாப்பு அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

* தமிழகத்தில் மே31 -ந் தேதி வரை விமான, ரெயில் சேவைகளை இயக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கோரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story

மேலும் செய்திகள்