பொது சேவை மையங்களில் ரயில் பயண முன்பதிவு - நாளை தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை பொது சேவை மையங்களில் ரயில் பயணத்​துக்கான முன்பதிவு தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொது சேவை மையங்களில் ரயில் பயண முன்பதிவு - நாளை தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு
x
நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 70 ஆயிரம் பொது சேவை மையங்களில், நாளை முதல் ரயில் பயணங்களுக்கான முன்பதிவு தொடங்க உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் 2 அல்லது 3 நாட்களில் செயல்பட ஏதுவான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் கூடுதல் ரயில்களை இயக்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும், ரயில் நிலையங்களில் உள்ள கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உட்கார்ந்து உணவு உட்கொள்ள அனுதி கிடையாது என்றும் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டரை மணி நேரத்தில் மட்டும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய 4 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊருக்கு திரும்ப பதிவு செய்தவர்களை போல, நகரங்களுக்கு பணிக்கு திரும்ப ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளது, பொருளாதார வளர்ச்சிக்கான நல்ல அறிகுறியாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்