முதல் கோவிட் சிகிச்சை மையம் திறப்பு - அறிகுறி, பாதிப்பு நோயாளிகள் மட்டும் அனுமதி

அயல்நாடு வெளிமாநிலங்களில் இருந்து கேரள திரும்பும் சில பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.
முதல் கோவிட் சிகிச்சை மையம் திறப்பு - அறிகுறி, பாதிப்பு நோயாளிகள் மட்டும் அனுமதி
x
அயல்நாடு வெளிமாநிலங்களில் இருந்து கேரள திரும்பும் சில பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பத்தனம்திட்டாவில், அமைக்கப்பட்ட முதல் கொரோனா சிகிச்சை மையத்தை எம்.எல்.ஏ ராஜு ஆபிரகாம் திறந்து வைத்தார். இந்த சிகிச்சை மையத்தில், ஒரு மருத்துவ அதிகாரி, 4 மருத்துவர்கள், 4 செவிலியர்கள் உட்பட பதினெட்டு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 45 இணைக்கப்பட்ட அறைகளில் 90 படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள், லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு மையத்தில் சிகிச்சை என்றும் உடலில் பிற பிரச்சினை உள்ளவர்களுக்கு இங்கு சிகிச்சை கிடையாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்