கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,12,359 - கொரோனாவால் 3,435 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை கடந்தது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,12,359 - கொரோனாவால் 3,435 பேர் உயிரிழப்பு
x
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 5 ஆயிரத்து 609 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் ஒரு லட்சத்து12,359 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 45 ஆயிரத்து 300 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 435 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 297 ஆக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்