"நாட்டில் கொரோனா வைரஸ் மீட்பு விகிதம் உயர்ந்து வருகிறது" - சுகாதாரத்துறை அமைச்சக இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தகவல்

இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேரில் சுமார் 8 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக இணைச்செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ்  மீட்பு விகிதம் உயர்ந்து வருகிறது - சுகாதாரத்துறை அமைச்சக இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தகவல்
x
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொற்றால் பாதிக்கப்பட்ட 61 ஆயிரத்து 149 பேர் மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 7 புள்ளி 9 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரு லட்சம் மக்களுக்கு 4 புள்ளி 2 சதவீதம் பேர் இறந்துள்ளனர் என்றும் இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு புள்ளி 2 சதவீதம் உயிரிழப்புகள் இருந்ததாக அகர்வால் கூறினார். முதல் ஊரடங்கு தொடங்கியபோது மீட்பு வீதம் 7புள்ளி 1 சவீதமாக இருந்தது என்றும் 2 வது ஊரடங்கு  போது மீட்பு விகிதம் 11 புள்ளி 42 சதவீதமாக இருந்ததாகவும் கூறினார்.  பின்னர் அது 26 புள்ளி 59 சதவீதமாக உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.  தற்போது மீட்பு விகிதம் 39புள்ளி 62 சதவீதம் என்றும்  லாவ் அகர்வால் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்