மாநில நிதி பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி விடுவிப்பு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வில் தமிழகத்திற்கு ஆயிரத்து 928 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநில நிதி பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி விடுவிப்பு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
x
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையில் பெரும்பாலானவற்றை  விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையாக 28 மாநிலங்களுக்கு 5 ஆயிரத்து 5 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் தமிழகத்திற்கு 295 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மே மாதம் நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ஆயிரத்து 928 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 28 மாநிலங்களுக்கு மொத்தம் 46 ஆயிரத்து 38 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு 8 ஆயிரத்து 255 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்