நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 140 பேர் உயிரிழப்பு - மத்திய சுகாதாரத்துறை

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 611 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 140 பேர் உயிரிழப்பு - மத்திய சுகாதாரத்துறை
x
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது. 42 ஆயிரத்து 298 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3 ஆயிரத்து 303 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரேனாவுக்கு பலியாகி உள்ளதாகவும், 5 ஆயிரத்து 611 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 37 ஆயிரத்து136 பேரும்,  தமிழகத்தில் 12 ஆயிரத்து 448 பேரும், குஜராத்தில் 12 ஆயிரத்து 140 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், தற்போது வரை 61 ஆயிரத்து 149 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் 63 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்த வைரஸ் தொற்று எண்ணிக்கை ஆயிரத்து 458 ஆக உயர்ந்துள்ளது. 553 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்