போட்டி தேர்வுகளுக்காக ஆன்டிராய்டு செயலி - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு

போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக சில தொழில்நுட்ப வழிமுறைகளை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார்.
போட்டி தேர்வுகளுக்காக ஆன்டிராய்டு செயலி - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவிப்பு
x
போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது குறித்து மாணவர்களிடம் இருந்து பல கோரிக்கைகளை பெற்றதாகவும், அதனை அடிப்படையாக கொண்டு புதிய செயலி ஒன்றை உருவாக்க அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம், நேஷ்னல் டெஸ்ட் அப்யாஸ் என்ற புதிய ஆன்டிராய்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில், ஜேஇஇ முதன்மை தேர்வு மற்றும் நீட் தேர்வுகளுக்கு தினந்தோறும் ஒரு முழு வினாத்தாள் கிடைக்கிறது. மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப எப்போது  வேண்டுமானாலும் 3 மணி நேர தேர்வில் கலந்து கொள்ள முடியும். இதில், உடனடி மதிப்பீடு மற்றும் விளக்கங்களுடன் சரியான பதில்களையும் பெறும் வசதியும் உள்ளதால், மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்