விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட தினம் - நினைவு கூர்ந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நினைவு கூர்ந்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட தினம் - நினைவு கூர்ந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
x

தூதரக அதிகாரியாக இருந்ததை அசை போட்டு பார்க்கிறார், மத்திய அமைச்சர்
1987ல் தூதரக அதிகாரியாக இருந்தார், ஹ​ர்திப் சிங் பூரி
பிரபாகரனுடன் ஒரே விமானத்தில் பயணம்... டெல்லி அழைத்து வர முயற்சி..
தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆருடன் பிரபாகரன் சந்திப்பு
எம்ஜிஆர் உள்ளிட்டோர் மேற்கொண்ட அமைதி முயற்சி
டெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு அழைப்பு
இந்தியா எடுத்த அமைதி முயற்சிகள் தோல்வியடைந்ததாக வேதனை




Vovt

இலங்கையில் இறுதிகட்ட போர் நடந்தபோது, 2009ம் ஆண்டு மே 18ம் தேதியன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரது நினைவு நாளில்,  அவருடனான நினைவுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார், தற்போதைய மத்திய அமைச்சரும் முன்னாள் இலங்கை தூதரக அதிகாரியுமான  ஹர்தீப் சிங் பூரி. 1987ம் ஆண்டில், கொழும்பு நகரில் உள்ள இலங்கைக்கான   தூதரகத்தில் இளம் அதிகாரியாக தான் நியமிக்கப்பட்டதை நினைவு கூர்ந்துள்ள ஹர்தீப் சிங் பூரி, அந்த சமயத்தில் இலங்கையில் உள்நாட்டு போர் உச்ச கட்டத்தில் இருந்ததாகவும், அப்போது பிரபாகரனை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். இன மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துக் கூறி, டெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். வல்வெட்டித் துறையில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் பிரபாகரனுடன் பயணம் செய்ததாக தெரிவித்துள்ள ஹர்திப்சிங் பூரி, அந்த சமயத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் மற்றும் பலரும் அமைதி ஏற்பட துணையாக இருந்ததையும் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். 
தொடர்ந்து அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வந்த போதிலும் 2009ம் ஆண்டு மே 18ம் தேதியன்று பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தமது பதிவில் ஹர்தீப் சிங் பூரி வேதனை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்