வாராக்கடன் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படுமா ? - அதிக அழுத்தங்களால் புலம்பும் வங்கி அதிகாரிகள்
பதிவு : மே 19, 2020, 08:51 AM
இந்திய பொதுத் துறை வங்கிகள் ஏற்கனவே வராக்கடனில் தத்தளித்து வரும் நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களுக்கு வங்கிகள் ஒத்துழைப்பு அளிக்குமா என்பது கேள்விக்குறி தான் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொருளாதார ஊக்குவிப்பு திட்டமாக ,வங்கிக் கடன் வாடிக்கையாளர்கள் கடன் தவணையை 3 மாதங்கள் ஒத்தி வைக்கலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த அறிவிப்பை எந்த வங்கிகளும் கடை பிடிக்காத  நிலையில் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஏற்றுக்கொண்ட வங்கிகளும் வட்டியை  கணக்கிட்டு வசூலிப்பதால்,கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பொருளாதார ஊக்குவிப்பு கடன் திட்டங்களை  வங்கிகள் எப்படி செயல்படுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே வாராக்கடனில் வங்கிகள் தத்தளித்து வரும் நிலையில்,அரசின் நிதித் திட்டங்களை செயல்படுத்த போதுமான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழப்பம் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, திவால் நிதி மோசடி சட்ட நடவடிக்கையில் இருந்து ஒரு ஆண்டுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால்,வாராக்கடன் அதிகரித்தால் ஒரு ஆண்டுக்கு நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இதனால், வங்கிகள் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டும் என்றும், அல்லது கடன் வாங்கி கட்டாமல் விட்டால் வாராக்கடன் உயரும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. நிதியமைச்சரின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பு திட்டங்களால் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகளின் புலம்பத் தொடங்கி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

திருவள்ளூர் : மகப்பேறு பிரிவில் பெண் ஒருவருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிசேரியன் செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

16 views

பிற செய்திகள்

பிஎம் கேர்ஸ்"- நிதி அளித்தவர்கள் யார்?" - காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி

ஊரடங்கு தொடங்கிய சில நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட "பிஎம் கேர்ஸ்" அமைப்பில் நிதி செலுத்தியவர்களின் பெயர்களை வெளியிட பிரதமர் மோடி பயப்படுவது ஏன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்,

24 views

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவரானார் ஹர்திக் பட்டேல்

காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செயல் தலைவராக தனது பட்டேல் சமூக போராட்டத்தில் பங்கேற்று பிரபலமான ஹர்திக் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

101 views

தங்கக் கடத்தல் - ஸ்வப்னா சுரேஷ் கைது

கேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

19 views

சீனாவில் இருந்து வெளியேற ஆப்பிள் நிறுவனம் முடிவு - இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க ஃபாக்ஸ்கான் திட்டம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ஆலையில், முதலீட்டை அதிகரிக்க உள்ளதாக தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

697 views

விகாஷ் துபே என்கவுன்டர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு - போலீசார், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம்

விகாஷ் துபேவின் என்கவுன்டர் மரணம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10 views

"புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தகுதி நீக்கம்" - சபாநாயகர் சிவகொழுந்து

புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் சிவகொழுந்து தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.