"நிபந்தனைகளுடன் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படும்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

நிபந்தனைகளுடன் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நிபந்தனைகளுடன் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படும் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
x
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா  உறுதியாகி உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 630 என்றும் கூறியுள்ளார். மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருக்கும் நிலையில், நிபந்தனைகளுடன் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படும் என கூறியுள்ளார்.

ஆனால் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நின்று பயணம் செய்ய  அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திற்காக படகுகளில் 33 சதவீத கட்டண உயர்வு அமல் படுத்தப்படும் என்றும், பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கலாம் என்றும், ஏசி பயன்படுத்தக்கூடாது
எனவும் கூறியுள்ளார்.

மதுக்கடைகளில் மது வாங்குவதற்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த செயலி செயல்பாட்டுக்கு வந்தவுடன் மதுக்கடைகளில்  மது விற்பனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்