சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு
பதிவு : மே 18, 2020, 04:40 PM
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி துவ​ங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கணிதம், வேதியியல், இயற்பியல், ஆங்கிலம், புவியியல் உள்ளிட்ட 23 பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வுக்கு வரும்  மாணவர்கள் சானிடைசர்கள் கொண்டு வரவும் முகத்தில் மாஸ்க் அணியவும் அறிவுறுத்தி உள்ள சிபிஎஸ்இ தேர்வு மையங்களில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்படுவார்கள் என்று  தெரிவித்துள்ளது. சென்னை மண்டலத்தை பொறுத்தவரை பெரும்பாலான தேர்வுகள் முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

புதுச்சேரி : காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தகுதிநீக்கம்

புதுச்சேரியில் பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேலை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

10 views

ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு - செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தது கேரள உயர்நீதிமன்றம்

கேரள அரசியலில் புயலைக் கிளப்பிய தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை செவ்வாய் கிழமைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

113 views

"கொரோனா பரவல்...தவறான தகவல் கூடாது" - புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர் வலியுறுத்தல்

கொரோனா பரவல் குறித்து தவறான தகவல்களை புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிடக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வலியுறுத்தியுள்ளார்.

37 views

"புதுச்சேரி - வரும் ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை" - புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

43 views

மத்தியப் பிரதேசத்தில் சோலார் பூங்கா துவக்கம் - பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்

மத்தியப் பிரதேச மாநிலம், ரேவாவில் அமைக்கப்பட்டு உள்ள 750 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

27 views

"போலீசாரின் என்கவுன்ட்டரில் விகாஸ் துபே மரணம் : தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்" - உத்தர பிரதேச காவல் படை சிறப்பு அதிகாரி

போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் உத்தர பிரதேசத்தின் காவல் படை சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

750 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.