"கொரோனா பாதிப்பில் உச்சம் - ரத்த பற்றாக்குறை"
பதிவு : மே 18, 2020, 11:46 AM
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த மகாராஷ்டிராவில், தொற்று எண்ணிக்கை 33 ஆயிரத்து 53 ஆக அதிகரித்த நிலையில், அங்குள்ள ரத்த வங்கிகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, மொத்த பாதிப்பில் ஆயிரத்து 198 பேர் உயிரிழந்த நிலையில், 7ஆயிரத்து 688 பேர் குணமடைந்துள்ளனர். தானே உள்ளடக்கிய மும்பை மாநகரில்  மட்டும், 25 ஆயிரத்து 130 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 811 பேர் இறந்துள்ளனர். தாராவியில் கொரோனாவால் 56 பேர் இறந்த நிலையில், ஆயிரத்து 242 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து மும்பை விமானநிலைய வாகன நிறுத்தம் உள்பட பல இடங்களில் ஒரு லட்சம் படுக்கை வசதிகளை அமைக்கும் பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, மகாராஷ்டிராவில் உள்ள 58 ரத்த சேமிப்பு வங்கிகளில், பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மாநில ரத்த வங்கி மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ரத்த சேமிப்பு நாளொன்றுக்கு 900 யூனிட்டில் இருந்து 400 யூனிட்டாக குறைந்ததே இதற்கு காரணம் என விளக்கம் அளித்துள்ள அந்த அமைப்பு, தற்போது இருப்பில் உள்ள ரத்தம் அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் எனக் கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

திருவள்ளூர் : மகப்பேறு பிரிவில் பெண் ஒருவருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிசேரியன் செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

16 views

பிற செய்திகள்

பிஎம் கேர்ஸ்"- நிதி அளித்தவர்கள் யார்?" - காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி

ஊரடங்கு தொடங்கிய சில நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட "பிஎம் கேர்ஸ்" அமைப்பில் நிதி செலுத்தியவர்களின் பெயர்களை வெளியிட பிரதமர் மோடி பயப்படுவது ஏன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்,

24 views

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவரானார் ஹர்திக் பட்டேல்

காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செயல் தலைவராக தனது பட்டேல் சமூக போராட்டத்தில் பங்கேற்று பிரபலமான ஹர்திக் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

101 views

தங்கக் கடத்தல் - ஸ்வப்னா சுரேஷ் கைது

கேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

19 views

சீனாவில் இருந்து வெளியேற ஆப்பிள் நிறுவனம் முடிவு - இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க ஃபாக்ஸ்கான் திட்டம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் ஆலையில், முதலீட்டை அதிகரிக்க உள்ளதாக தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

697 views

விகாஷ் துபே என்கவுன்டர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு - போலீசார், அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம்

விகாஷ் துபேவின் என்கவுன்டர் மரணம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

10 views

"புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தகுதி நீக்கம்" - சபாநாயகர் சிவகொழுந்து

புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேல் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் சிவகொழுந்து தெரிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.