சுயசார்பு பாரதம் திட்டம் - இன்று காலை 11 மணிக்கு அடுத்த அறிவிப்பு

சுயார்பு சார்பு திட்டத்தின் கீழ் 4ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் நிலக்கரி மற்றும் கனிம வளத்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
சுயசார்பு பாரதம் திட்டம் - இன்று காலை 11 மணிக்கு அடுத்த அறிவிப்பு
x
சுயார்பு சார்பு திட்டத்தின் கீழ் 4ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும்  நிலக்கரி மற்றும் கனிம வளத்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். பாதுகாப்பு உற்பத்தி துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்றும், ஆயுத தொழிற்சாலைகள் கார்ப்பரேட் மயமாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் ஏலம் விடப்படும் என்றும் , விமான நிலையங்களை மேம்படுத்த 2 ஆயிரத்து 300 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் சுட்டிக் காட்டினார். இவ்வாறு 8 துறைகளுக்கான புதிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்