நகரும் சூட்கேசில் சிறுவன் தூங்கியபடி சென்ற அவலம்: பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஆக்ரா ஆட்சியருக்கு நோட்டீஸ்- மனித உரிமை ஆணையம் அதிரடி

கொளுத்தும் வெயிலில் சிறுவன் நகரும் சூட்கேசில் தூங்கிச் சென்றது தொடர்பாக, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் ஆக்ரா மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது
நகரும் சூட்கேசில் சிறுவன் தூங்கியபடி சென்ற அவலம்: பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஆக்ரா ஆட்சியருக்கு நோட்டீஸ்- மனித உரிமை ஆணையம் அதிரடி
x
ஊரடங்கு காரணமாக, புலம் பெயர்ந்து வாழும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து வசதியும் செய்து தரப்படும் என மத்திய மாநில அரசுகள் தெரிவித்தாலும், சிறப்பு ரயில்களை இயக்கினாலும் எதுவும் முழுமை பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தங்களின் சொற்ப சொத்துக்களை தலையில் சுமந்தபடி மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு கால்நடையாகவே சாலை மற்றும் ரயில் பாதை மார்க்கங்களில் செல்லும் அவலம் கடந்த மார்ச் 24 முதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நகரும் சூட்கேசில் கொளுத்தும் வெயிலில் சிறுவன் தூங்கி கொண்டிருக்க, தாய் சூட்கேஸை இழுத்து செல்லும் உருக்கமான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்