ஆந்திராவில் பணிபுரிந்த 14 தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு - புதுச்சேரி அமைச்சர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்

ஆந்திராவில் பணிபுரிந்த 14 தொழிலாளர்களை ஏனாம் பிராந்தியத்திற்குள் அனுமதிக்காததை கண்டித்து புதுச்சேரி மாநில அமைச்சர் போராட்டம் நடத்தினார்.
ஆந்திராவில் பணிபுரிந்த 14 தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு  - புதுச்சேரி அமைச்சர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்
x
ஆந்திராவில் பணிபுரிந்த 14 தொழிலாளர்களை ஏனாம் பிராந்தியத்திற்குள் அனுமதிக்காததை கண்டித்து புதுச்சேரி மாநில அமைச்சர் போராட்டம் நடத்தினார். ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட 14 பேர் ஆந்திர மாநிலத்திற்கு பணிக்கு சென்ற நிலையில் தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். அவர்களை ஊர் எல்லையில் தடுத்து நிறுத்தியதுடன் ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனை கண்டித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சரான மல்லாடி கிருஷ்ணாராவ் கருப்பு உடையணிந்து சட்டமன்ற வளாகத்தின் நுழைவாயில் முன் போராட்டம் நடத்தினார். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்