ஊரடங்கு உத்தரவால் "டிவி, ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு"
பதிவு : ஏப்ரல் 10, 2020, 07:25 AM
ஊரடங்கு உத்தரவால், தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால், தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள, ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பதால், டிவி மற்றும்  ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக, நீல்சன் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,இந்தியாவில் மார்ச் 28ஆம்தேதி அன்று தொடங்கிய வாரத்தில், தொலைக்காட்சி பார்ப்பது 43 % அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் இது 44 % அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷனில் இதிகாச தொடர்கள் மீண்டும் ஓளிபரப்பு தொடங்கிய பின், இந்தியாவில் அதிகம் பேர் பார்க்கும் தொலைக்காட்சி சேனலாக, அது மாறியுள்ளது. மார்ச் 28ஆம் தேதி அன்று தொடங்கிய வாரத்தில் திரைப்படம் பார்ப்பது அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் செய்திகளை பார்ப்பது அதிகமாக இருந்தது.

மிக முக்கியமான பழைய மேட்சுகள் மறு ஒளிபரப்பு செய்யப்படுவதால், விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்ப்பது 21% அதிகரித்துள்ளது.பிரைம் டைம் அல்லாத நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பது 43 சதவீதமும், பிரைம் டைம்மில் 11 சதவீதமும் அதிகரித்துள்ளது.திரைப்படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 77 சதவீதமும், தமிழகத்தில் 89 சதவீதமும் அதிகரித்துள்ளது.ஸ்மார்ட் போன் பயன்படுத்துவபர்களின் விகிதம் மார்ச் 21 அன்று தொடங்கிய வாரத்தில் 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் சராசரி அளவு,  தினமும் 3.24 மணி நேரத்தில் இருந்து 3.48 மணி நேரமாக அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் மூலம் பணம் செலுத்துவது 4 % அதிகரித்து 77 சதவீதத்தை எட்டியுள்ளது.வீடியோ ஆன் டிமாண்ட் எனப்படும் இணையம் மூலம் தொடர்கள், படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 97 %  அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு பயனாளி,  இவற்றை பார்க்கும் நேரம் 12 % அதிகரித்து வாரத்திற்கு 3.59 மணி நேரத்தை எட்டியுள்ளது.

ஸ்மார்ட் போன்களில், மூன்று அல்லது அதற்கும் அதிகமான விளையாட்டு செயலிகள் வைத்திருப்பவர்கள், இவற்றை பயன்படுத்துவது 40 % அதிகரித்துள்ளதாக, நீல்சன் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

412 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

173 views

பிற செய்திகள்

செல்போன் எண்கள்11 இலக்கமாக மாற்றமா? - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்

செல்போன் எண்கள் 11 இலக்கமாக மாற்றப்படுமா என்கிற சர்ச்சைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

76 views

மதுரை சலூன் கடைக்கார‌ருக்கு பிரதமர் மோடி பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

481 views

சமூக வலைதளம் மூலம் பிரதமர்கள் உரை : சமோசா தயாரித்து பதிவிட்ட ஆஸ்திரேலிய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், சமூக வலை தளமான டிவிட்டர் மூலம் உரையாடினர்.

13 views

கொரோனா பரிசோதனை - மத்திய அரசின் புதிய திட்டம்

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.

1593 views

புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - "தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிருங்கள்" - பொது மக்களுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் வேண்டுகோள்

புதுச்சேரியில் மருத்துவர், கர்ப்பிணி பெண் உட்பட மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

12 views

108 சூரிய நமஸ்காரங்களை செய்த 9 வயது சிறுமி - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டி விழிப்புணர்வு

மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களை பாராட்டும் வகையிலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியும் 9 வயது சிறுமி தனது தந்தையுடன் சேர்ந்து, 108 சூரிய நமஸ்காரங்களை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.