"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
x
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, உணவு பொருள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி மற்றும் தயாரிப்பு, போக்குவரத்துக்கு தடையில்லை என அந்த கடித்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 144 தடை உத்தரவை காரணம் காட்டி சிலர் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்ற நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா அறிவுறுத்தி உள்ளார். பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையை தடுக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை அமல்படுத்தவும் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அத்தியாவசியப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அவ்வாறு செயல்படுபவர்கள் மீது 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும், மாநில தலைமை செயலாளர்க​ளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைப்பதை தலைமை செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்