"இந்தியாவில் 40 கோடி பேர் ஏழைகளாக மாறுவர்" - ஐக்கிய நாடுகள் தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை

கொரோனா ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் 40 கோடி பேர் ஏழைகளாக மாறுவர் - ஐக்கிய நாடுகள் தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை
x
கொரோனா  ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள கணிப்புகளில், உலக அளவில் சுமார் 20 கோடி நிரந்தர பணியாளர்கள் வேலை இழக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.  இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகம் உள்ளதால், மக்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாகவும், இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலில் உள்ள சுமார் 40 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே செல்லும் நிலை உள்ளதாகவும் கூறியுள்ளது. அரபு நாடுகளில் சுமார் 50 லட்சம் நிரந்தர பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்