எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு

குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்கள், மற்றும் எம்பிக்கள் ஊதியம் 30 சதவீதம குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு
x
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர்  மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், குடியரசு தலைவர் மற்றும் அனைத்து எம்பிக்களின் ஊதியம் 30 சதவீதம்  குறைக்கப்படுவதாகவும், இது ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்தார். இதேபோல் எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அந்த நிதி பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் சுமார் 7 ஆயிரத்து 900 கோடி ரூபாய் சேமிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேபோல் 21 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு நாட்டு நலன் மற்றும் பொதுமக்கள் நலன்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்