அதிகரிக்கும் மின்னணு பரிவர்த்தனைகளால் மாற்றமடைந்த வங்கிச் சேவைகள்

பாதுகாப்பாக செலுத்துங்கள் - பாதுகாப்பாக இருங்கள் (Pay Safe-Stay Safe) என்கிற விழிப்புணர்வு பிரச்சாரத்தை வங்கிகள் முன்னெடுத்துள்ள நிலையில், மின்னணு பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு..
அதிகரிக்கும் மின்னணு பரிவர்த்தனைகளால் மாற்றமடைந்த வங்கிச் சேவைகள்
x
இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், வங்கிச் சேவைகள் தடையின்றி கிடைக்க மாற்று திட்டங்களை ஏற்பாடு  செய்ய அனைத்து வங்கிகளையும் இந்திய வங்கிகள் சங்கம் கேட்டுக் கொண்டிருந்தது. அதையடுத்து, வங்கிகளின் செயல்பாட்டு நேரம் குறைக்கப்பட்டதுடன், கிளைகளின் ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டன. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான பணத் தேவைக்கு ஏற்ப  ஏடிஎம் மையங்கள் வழக்கம்போல இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், காகித பணபரிமாற்றத்தை குறைத்துக் கொண்டு, மின்னணு பரிவர்த்தனைகளுக்கு மாறவும் வலியுறுத்தி இருந்தார். இதற்கு காரணம், ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிகள், அதிகப்படியான எண்ணிக்கையில் மக்கள் அடிக்கடி வருகின்ற பகுதியாக இருப்பதால், வைரஸ் தொற்று பரவலை எற்படுத்தும் என்கிற எண்ணம்தான்.அதையடுத்து அதிகபடியான மக்கள் மின்னணு பரிவர்த்தனைகளுக்கு மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்னணு வங்கி சேவைகளான கைபேசி வழி வங்கி சேவைகள் மற்றும் இணையவழி வங்கி சேவை ஆகியவை தொடர்ந்து செயல்படும் நிலையில் பாதுகாப்பான வழிமுறையாக மாறியுள்ளது. பணத்தின் மூலம் கொரோனா பரவும் என்கிற அச்சத்தின் காரணமாகவும் மக்கள் மின்னணு சேவைகளுக்கு மாறி வருகின்றனர்..மின்னணு பண பரிவர்த்தனைக்கு மாறுவதால் நாடு பல்வேறு பொருளாதார ஆச்சரியங்களை சந்திக்க உள்ளதாக 2016 ஆண்டு பண மதிப்பு நீக்கத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஆனால், தற்போது மின்னணு பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், ஆச்சர்யங்கள் எதுவும் நிகழாது என்றே பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்