இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு - தனியார் மருத்துவர் மீது பெண்ணின் கணவர் குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில், இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணுக்கு தனியார் மருத்துவர், சிசிக்சை அளிக்க மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு - தனியார் மருத்துவர் மீது பெண்ணின் கணவர் குற்றச்சாட்டு
x
ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில், இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணுக்கு தனியார் மருத்துவர், சிசிக்சை அளிக்க மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த பெண்ணின் கணவர், நிறைமாத கர்ப்பிணியான தமது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ஜனனா என்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால் இஸ்லாமியர் என்பதால்,சிகிச்சை அளிக்க மறுத்து, ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு சென்ற போது பாதி வழியிலேயே, குழந்தை பிறந்ததாகவும் ஆனால் சில நிமிடங்களில் குழந்தை இறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம், பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இதனிடையே இந்த புகாருக்கு, ஜனனா மருத்துவமனை மருத்துவர் ரூபேந்திர ஜா, மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடந்து முடிந்தவுடன், முழு விளக்கத்தையும் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்