பங்குச் சந்தை வர்த்தக நேரம் குறைப்பு : முதலீட்டாளர்களின் இழப்பால் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தக நேரம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பங்குச் சந்தை வர்த்தக நேரம் குறைப்பு : முதலீட்டாளர்களின் இழப்பால் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
x
ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தக நேரம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக பங்கு வர்த்தகம் படு வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஜனவரி மாதம் 40 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் இருந்த சென்செக்ஸ் தற்போது 27 ஆயிரம் புள்ளிகளுக்கு வந்துவிட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், பங்குச் சந்தை வர்த்தக நேரத்தை ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை மட்டுமே நடைபெறும் என தெரிவித்துள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெறும்.

Next Story

மேலும் செய்திகள்