ஊரடங்கை மீறிய இளைஞரை போலீசார் அடித்து உதைத்ததாக புகார்
ஆந்திராவில் ஊரடங்கை மீறியதாக கூறி போலீசார் தன்னை அடித்து துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ வெளியிட்டு விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கைகளூரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் திருப்பதி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊரடங்கால் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனிடையே இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை போலீசார் அடித்து உதைத்ததோடு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், காவல் நிலையம் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பாக போலீசார் தன்னை துன்புறுத்தியதால் விரக்தி அடைந்ததாகவும், தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில் துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story

