டிக்டாக் நிறுவனம் ரூ.100 கோடி உதவி: பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்களை அளிக்கிறது

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் விதமாக டிக்டாக் நிறுவனம் 100 கோடி ரூபாய் நன்கொடை உதவிகளை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
டிக்டாக் நிறுவனம் ரூ.100 கோடி உதவி: பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்களை அளிக்கிறது
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் விதமாக டிக்டாக் நிறுவனம் 100 கோடி ரூபாய் நன்கொடை  உதவிகளை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் 4 லட்சம் பாதுகாப்பு உடல் கவசம் மற்றும் 2 லட்சம் முகக்கவசம் ஆகியவற்றையும் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது  பாதுகாப்பு உடைகளை முறையான தரம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு தயாரித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. முகக்கவசங்களை டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  மக்கள் வீட்டிலேயே இருக்கும் காரணத்தால் இந்தியாவில் தற்போது டிக்டாக் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்னணி பிரபலங்கள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை டிக் டாக் மூலம் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்