டெல்லியில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை - கடமை தவறியதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடமை தவறியதாக டெல்லி அரசின் 4 உயர் அதிகாரிகளுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லியில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை - கடமை தவறியதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி
x
பொது சுகாதாரம் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியதாக கூறி, டெல்லி அரசின் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலர், நிதித்துறையின் முதன்மைச் செயலரும் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், டெல்லி உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலர், சீலம்பூர் சார் கோட்டாட்சியர் ஆகியோர், விளக்கமளிக்கவும்,  நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு  அமலில் இருக்கும் போதும், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆனந்த் விஹார் பேருந்துநிலையத்தில் குவிந்தது, இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. டெல்லியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்ததுள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில், 23 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்