நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு : ஏழை மக்கள் நலன் காக்க அரசுக்கு ப. சிதம்பரம் யோசனை

உணவு கிடைக்காமல் அவதிப்படும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசுக்கு ப சிதம்பரம் 10 யோசனைகளை தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு : ஏழை மக்கள் நலன் காக்க அரசுக்கு ப. சிதம்பரம் யோசனை
x
விவசாய மக்களுக்கு உடனடி உதவி தொகையாக 12 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் எனவும் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கு மூலம் 3 ஆயிரம் ரூபாயும், நகர்புற ஏழை மக்களுக்கு ஜந்தன் வங்கி கணக்கு மூலம் 6000 ருபாய் வழங்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.  ரேஷன் கடைகள் மூலம் 10 கி அரிசி அல்லது கோதுமையை உடனடி தேவையாக வீட்டுக்கே வந்து வழங்க ஆவண செய்யவும் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் ஒவ்வொருவரின் கணக்கிலும் மூன்று ஆயிரம் ருபாய் செலுத்த வேண்டும் எனவும் கடன் தவணை காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டிக்க வங்கிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும், எனவும் சிதம்பரம் கேட்டு கொண்டுள்ளார். ஜிஎஸ்டியை ஏப்ரல்1  முதல் ஜூன் 30 வரை 5 சதவீதம் குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்