கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு : காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை
பதிவு : மார்ச் 24, 2020, 05:54 PM
மாற்றம் : மார்ச் 24, 2020, 07:53 PM
கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பற்றி, பல்வேறு ஊடகத் துறையைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.
தினத்தந்தி குழுமம் சார்பாக,  நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் தினத்தந்தி குழும இயக்குனர் ஆதவன் ஆதித்தன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ஆலோசனையில், கொரோனா வைரசின் தீவிரத்தை முதல் நாளிலிருந்தே புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் செயலாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு, அவர் நன்றி கூறினார். அர்ப்பணிப்பு உணர்வுடன்  பணியாற்றி வரும் பல்வேறு ஊடகங்களில் சார்ந்த செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும், கொரோனா வைரஸ் தொற்று ஒரு வாழ்நாள் சவால் என்றும் அவற்றை புதிய மற்றும் வித்தியாசமான தேர்வுகளின் மூலம் எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். சிக்கலான இந்த சூழலை எதிர்கொள்ள பிரதமர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஊடகத்துறை பிரதிநிதிகளும் தங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டனர். ரூபாய் தாள்கள் மூலமாக கொரோனா அதிகம் பரவும் வாய்ப்பு இருப்பதால், டிஜிட்டல் பரிவர்த்தனையை பொதுமக்கள் மேற்கொள்ள ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

694 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

342 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

85 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

29 views

பிற செய்திகள்

"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

15 views

தனுஷ்கோடி மக்களுக்கு நேரடியாக பொருட்கள் - மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் தகவல்

தனுஷ்கோடி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

18 views

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

113 views

எழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

316 views

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு - காவல்துறையினர் நூதன பிரசாரம்

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

76 views

வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகர் போலீசாரும், தன்னார்வலர்களும் இணைந்து வீதி நாடகம் நடத்தி அசத்தினர்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.