"கேரளாவில் கொரோனா பாதிப்பு 52 ஆக உயர்வு"

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வந்த ஒரு குழந்தை உள்ளிட்ட மேலும்12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
கேரளாவில் கொரோனா பாதிப்பு 52 ஆக உயர்வு
x
உலகை அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.  வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்களில் 6 பேர் காசர்கோட்டிலும், 3 பேர் எர்ணாகுளத்திலும், மேலும் மூவர் கண்ணூரிலும் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை உள்ளிட்ட மற்ற மூவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே உள்ளதோடு சேர்த்து 52 பேருக்கு கொரோனா உள்ளது. இம்மாத தொடக்கத்தில் துபாயில் இருந்து வந்த ஒருவர், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், திருமணங்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தெரியவந்துள்ளது. அவரது பயண வரைபடம் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோயில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். பீதி வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பினராயி விஜயன், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்