இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு : எது கிடைக்கும்... எது கிடைக்காது?
பதிவு : மார்ச் 22, 2020, 01:07 AM
கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று என்னவெல்லாம் இயங்காது, எதுவெல்லாம் கிடைக்காது என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று என்னவெல்லாம் இயங்காது, எதுவெல்லாம் கிடைக்காது என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம். போக்குவரத்தை பொறுத்தவரை இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு போக்குரவத்து கழகங்களின் பேருந்துகள் இயங்காது. தனியார் பேருந்து உரிமையாளர்களும் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சாலைகள் வருகிற 31 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. இந்த சாலைகளில், அத்தியாவசிய பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள் ஆம்புலன்ஸ், சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னையில் மெட்ரோ ரயில் இன்று இயங்காது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.  சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நாடு முழுவதும் ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு தொகையும் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் காய்கறி, மளிகை கடைகள், ஓட்டல்கள் இன்று இயங்காது என அந்தந்த அமைப்புகள் அறிவித்துள்ளன. வாடிக்கையாளர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு அத்தியாவசிய பொருட்கள் கேட்கும் பட்சத்தில், வீடுகளுக்கு சென்று வழங்கலாம் என்று வணிகர்கள் சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன. கோயம்பேடு சந்தை இன்று ஒருநாள் மட்டும் மூடப்படுகிறது. தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம், மருந்து கடைகள், பெட்ரோல் நிலையங்கள் நாளை வழக்கம் போல இயங்கும்


தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

604 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

233 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

46 views

பிற செய்திகள்

மார்ச் 10 முதல் 17 வரை பீனிக்ஸ் மால் சென்றவரா நீங்கள்? - கவனமுடன் இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் வணிக வளாகத்திற்கு மார்ச் 10 முதல் மார்ச் 17க்கு இடைப்பட்ட நாட்களில் சென்றவர்கள் கவனமாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

25 views

தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் : கிருமி நாசினிகளை வழங்கினார் ஆர்.எஸ்.பாரதி

கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம் அணிவது மற்றும் கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

14 views

கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடன் - மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை

வறுமையில் வாடும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ 10,000 கடனாகவும் 5 ஆயிரம் மானியமாகவும் உடனடியாக வழங்க வேண்டும் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

11 views

அரசு மருத்துவமனையில் எம்.பி.திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மருத்துவமனையில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

7 views

ஆன்லைன் மூலம் வகுப்புகள் - சென்னை பல்கலை. துணை வேந்தர் உத்தரவு

ஊரடங்கு உத்தரவால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.

33 views

மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் தினசரி சந்தையை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.