கொரோனா தாக்கம்-வீடுகளில் முடங்கிய மக்கள் : வணிக வளாகங்கள் வருமானம் 30 % சரிவு

கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை இல்லாத வகையில் இந்திய தொழில்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
கொரோனா தாக்கம்-வீடுகளில் முடங்கிய மக்கள் : வணிக வளாகங்கள் வருமானம் 30 % சரிவு
x
கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை இல்லாத வகையில் இந்திய தொழில்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தினால் சுற்றுலாத்துறை, விமான நிறுவனங்கள் ஆகியவை பெரும் இழப்பினை சந்தித்துள்ளன. சுற்றுலா துறையில் சுமார் 70 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளதாக  இந்திய சுற்றுலா சங்கங்களில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  4 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதுடன், ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் விமான சேவை நிறுவனங்களில் இழப்பு சுமார் 40 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 600 சர்வதேச விமானங்கள் இந்தியாவுக்கான சேவையை நிறுத்தியுள்ளன. இந்தியாவில் இருந்து 500 சர்வதேச சேவைகளை நிறுத்தப்பட்டுள்ளன. விமான நிறுவன ஊழியர்கள் வேலை இழந்துள்ள நிலையில்,  இன்டிகோ நிறுவனம் 25 சதவீதம் வரை சம்பள பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் போக்குவரத்து போன்ற துறைகள் செயல்பாட்டு இழப்பை சந்தித்து வருகின்றன. பெரிய நகரங்களில் கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள்  திரையரங்குகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், 30 சதவீத வர்த்தக இழப்பை கண்டுள்ளன. மக்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளதுடன்,  வீடுகளில் முடங்கி உள்ளதால், அவர்களது வாங்கும் சக்தியும் குறைந்துள்ளது. 

கிரெடிட் கார்டு, வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றை திருப்பி செலுத்துவதிலும் சிக்கல் உருவாக உள்ளது. போக்குவரத்து வாகனங்களின் பயன்பாடு குறைந்து பெட்ரோல், டீசலின் பயன்பாடும் குறைந்துள்ளதால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியில்கூட, ஸ்திரமாக இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது அவ்வாறு நிற்காது என கணிக்கப்பட்டுள்ளது.2016 ஆம் ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கை போல நிலைமைகள் உள்ளதாகவும், அந்த நினைவுகளை மறந்த நிலையில், தற்போது அதைவிட மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்