"கொரோனா எதிரொலி - 128 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடல்"

கொரோனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 128 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பக்தர்களுக்கான அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா எதிரொலி  - 128 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான்  கோயில் மூடல்
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் மத்திய, மாநில அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கான அனுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த1892 ஆம் ஆண்டு 2 நாட்கள் கோவில் மூடப்பட்ட நிலையில், 128 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தான் கோயில் மூடப்படுவதாகவும் அதே சமயம், சுவாமிக்கு பூஜைகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். இதேபோல திருப்பதியில் உள்ள கோதண்டராமர் சுவாமி கோவில், கோவிந்தராஜா சுவாமி கோவில், திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இதன்படி, வியாழக்கிழமை நண்பகலில் இருந்து, பக்தர்களுக்கான அனுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஏழு நாட்களுக்குப் பிறகு கொரோனா நிலை குறித்த அரசுகளின் நிலைப்பாட்டை பொருத்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்