மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் இன்று மாலை 5 மணிக்குள் நம்​பிக்கை வாக்கெடுப்பை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
x
22 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி முன்னாள் முதலமைச்சர்  சிவராஜ் சிங் சவுகான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் விரும்பினால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை கர்நாடக மாநில டிஜிபியும், மத்தியபிரதேச மாநில டிஜிபியும் ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் மத்தியப் பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்