கொரோனா தாக்கம் : இந்தியாவில் வட்டி விகிதம் குறையுமா? - தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

கொரோனா தாக்கத்தால் உலக அளவில் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளதால் பல நாடுகளும் வட்டிவிகிதங்களை குறைத்து வருகின்றன.
கொரோனா தாக்கம் : இந்தியாவில் வட்டி விகிதம் குறையுமா? - தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
x
கொரோனா தாக்கத்தால், உலக அளவில் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளதால், பல நாடுகளும் வட்டிவிகிதங்களை குறைத்து வருகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக,   அந்த நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை பூஜ்ஜியம் சதவீதமாக குறைத்துள்ளது. இதையடுத்து துருக்கியும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. தென்கொரியா, சிலி, வியட்நாம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. வரும் நாட்களில் தென் ஆப்ரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில் ஆகிய நாடுகளும் வட்டியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவும் வட்டி விகிதத்தினை குறைக்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்