மீண்டும் செயல்படத் தொடங்கியது யெஸ் வங்கி - முழுமையான சேவைகளை அளிப்பதாக அதிகாரிகள் தகவல்

யெஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததை அடுத்து வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மீண்டும் செயல்படத் தொடங்கியது யெஸ் வங்கி - முழுமையான சேவைகளை அளிப்பதாக அதிகாரிகள் தகவல்
x
யெஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததை அடுத்து, வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன. யெஸ் வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி மார்ச் 5 ஆம் தேதி யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க   கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. கடன் வழங்குவது உள்ளிட்ட  செயல்பாடுகளும் முடக்கப்பட்டன. இந்த நிலையில்,  வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு சேவையாக வழக்கப்பட்ட நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஒடிசா மாநிலத்தில், பூரி ஜெகன்நாத் கோயில் கணக்கில் இருந்து 397 கோடி ரூபாய் எஸ்பிஐ வங்கி மூலம் அளிக்கபட்ட தகவலை அந்த வங்கி அதிகாரிகள் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்