இந்தி திணிப்பு தொடர்பான துணைக் கேள்வி - தி.மு.க. உறுப்பினர்கள் கேட்க சபாநாயகர் அனுமதி மறுப்பு
பதிவு : மார்ச் 17, 2020, 05:20 PM
இந்தி திணிப்பு குறித்து துணைக் கேள்வி கேட்பதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்
மக்களவையில் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் அரவிந்த் குமார் ஷர்மா, இந்தியை நாட்டின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், மத்திய அரசு அலுவலகங்களில் ஹிந்தியை பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகவும், மத்திய அரசு பணிகளில் ஹிந்தியின்  பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக அலுவல் மொழிகள் துறை முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார். 

அப்போது குறுக்கிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு பற்றி துணைக் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்த தி.மு.க. உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தின் முக்கியமான விஷயம் குறித்து பேசுவதற்கு அனுமதி மறுப்பது தவறு என ராகுல்காந்தி குறிப்பிட்டார். இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பிற செய்திகள்

"மக்கள் நலன் காக்க களப்பணி ஆற்றுவோம்" - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மக்கள் நலன் காக்கும் பணியில் தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

27 views

"தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது" - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 96 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

51 views

"எம்எல்ஏக்கள் மாத ஊதியத்தில் 30% தரவேண்டும்"- கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, கர்நாடகாவில், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், தங்கள் மாத ஊதியத்தில், 30 சதவீதத்தை, ஒராண்டிற்கு தொடர்ந்து வழங்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

21 views

"சென்னையில் கொரோனா பதற்றப் பகுதி இல்லை" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் கொரோனாவால், பதற்றமான பகுதி ஏதும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

415 views

விலகி இரு, வீட்டில் இரு - முதலமைச்சர் வேண்டுகோள்

'நமக்காக உழைப்போருக்கு நாமும் ஒத்துழைபோம்' என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

20 views

போக்குவரத்து காவலர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து காவலர் அருண்காந்தி மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.