கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: பக்தர்களுக்கு நேரில் ஆசி வழங்குவது நிறுத்தம் - மாதா அமிர்தானந்தமயி முடிவு
கேரளாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, மாதா அமிர்தானந்தமயி, பக்தர்களுக்கு நேரில் ஆசி வழங்குவதை நிறுத்தினார்.
கொல்லத்தை அடுத்த அமிர்தபுரியில் உள்ள அவரது மடத்திற்கு, நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரும் நிலையில், அவர்களை நேரில் சந்தித்து ஆசி வழங்குவதை, மாதா அமிர்தானந்தமயி வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக, பக்தர்கள் சந்திப்பை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறுவுறுத்தியதன் பேரில், அவர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.
Next Story

