"யெஸ் வங்கியில் செலுத்தப்பட்ட ரூ.1,300 கோடி" - ஆந்திர முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை
யெஸ் வங்கியில் செலுத்திய ஆயிரத்து 300 கோடி ரூபாயை சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி தேவஸ்தானம் திரும்பப் பெற்றதால் பக்தர்கள் பணம் காப்பாற்ற பட்டதாக அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பா ரெட்டி, திருப்பதி தேவஸ்தானத்தின் பணம் எங்கு எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய போது, 11 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது. அதில் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஐந்து தனியார் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், தற்போது திவாலாகி உள்ள யெஸ் வங்கி குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகளை ஆதாரமாக கொண்டு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆலோசனைப்படி அங்கிருந்த ஆயிரத்து 300 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். இதன் மூலம், தனியார் வங்கியில் இருந்து 3 ஆயிரம் கோடி ரூபாய் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள இரண்டாயிரம் கோடி ரூபாயை ஆக்சிஸ் வங்கி மற்றும் இந்துஸ் வங்கியிலிருந்து இந்த நிதி ஆண்டிற்குள் திரும்ப பெறப்படும் என தெரிவித்தார்.
Next Story

