பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு : 5 ஆண்டுகளுக்கு ரூ.446.52 கோடி

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு, 446 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் வெளிநாட்டு பயண செலவு : 5 ஆண்டுகளுக்கு ரூ.446.52 கோடி
x
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு, 446 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரத்யேக விமான செலவை உள்ளடக்கியது இந்த தொகை என மக்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்துள்ளார். அதன்படி, 2015 - 2016  ஆம் ஆண்டில் 121.85 கோடி ரூபாயும், 2016 - 2017  ஆம் ஆண்டில் 78.52 கோடியும், 2017 - 2018  ஆம் ஆண்டில் 99.90 கோடி செலவானதாகவும், 2018 - 2019  ஆம் ஆண்டில் 100.02 கோடி ரூபாயும், 2019 - 2020  ஆம் ஆண்டில் 46.23 கோடி ரூபாயும், பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு செலவானதாக அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்