போலி ஏடிஎம் கார்டு மூலம் கொள்ளை முயற்சி - 4 பேர் கைது
கேரளாவில் போலி கார்டு பயன்படுத்தி ஏடிஎம்மில் பணம் கொள்ளையடிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காசர்கோடு நகரத்தில் உள்ள வங்கியின் ஏடிஎம்-க்குள் ஒரு கும்பல் நீண்ட நேரமாக நிற்பதை கண்ட அப்பகுதி மக்களுக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது போலி ஏடிஎம் கார்டு மூலம் பணம் கொள்ளையடிக்க முயற்சித்தது தெரிய வந்தது. இதனையடுத்து திருச்சியை சேர்ந்த ஜெயராம் மற்றும் கேரளாவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஏடிஎம் கார்டுகள், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணம், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story

