பாகிஸ்தான் வாழ்க என முழக்கமிட்ட நபர் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
கர்நாடக மாநிலம், குந்தாபுரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று காலை வழக்கம் போல பணிகள் தொடங்கியபோது, பார்வையாளராக வந்திருந்த ராகவேந்திரா கனிகி என்ற நபர் திடீரென பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டார்.
கர்நாடக மாநிலம், குந்தாபுரா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று காலை வழக்கம் போல பணிகள் தொடங்கியபோது, பார்வையாளராக வந்திருந்த ராகவேந்திரா கனிகி என்ற நபர் திடீரென பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டார். இதனை கண்ட ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட நபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் பல நாட்களாக மனநலம் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது.
Next Story

