திருப்பதியில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி

திருப்பதியில் முதல் முறையாக தைவான் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
திருப்பதியில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி
x
திருப்பதியில் முதல் முறையாக  தைவான் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. திருப்பதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இயந்திர பணிக்காக சென் சுன் ஹாங் என்பவர் கடந்த 17 ஆம் தேதி இந்தியா வருகை தந்திருந்தார். இந்நிலையில், சென் சுன் ஹாங்கிடம் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால், அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ்க்கான சிறப்பு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவரது ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்