"சசிகலா புஷ்பா எம்.பி. காரில் தாமரை ஸ்டிக்கரை அகற்ற வேண்டும்" - தேவஸ்தான அதிகாரிகள் கூறியதால் இருதரப்பு வாக்குவாதம்
ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா நேற்று இரவு திருப்பதி சென்றார்.
ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா நேற்று இரவு திருப்பதி சென்றார். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வதற்காக அலிபிரி சோதனை சாவடி வந்தபொழுது சோதனை சாவடியில் இருந்த தேவஸ்தான அதிகாரிகள் அவரது காரை சோதனை செய்தனர். அப்போது பாஜகவின் சின்னமான தாமரை ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததை அடுத்து அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு சசிகலா புஷ்பா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் இரு தப்பினரும் மன்னிப்பு கேட்டதையடுத்து போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.
Next Story

