தோட்டத்தில் கிடந்த துப்பாக்கி குண்டுகள் : POF-பாகிஸ்தான் ஆயுத தயாரிப்பு ஆலையின் குறியீடு

கேரள மாநிலம் கொல்லம் அருகே தோட்டத்தில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி தோட்டாக்களை கைப்பற்றிய போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தோட்டத்தில் கிடந்த துப்பாக்கி குண்டுகள் : POF-பாகிஸ்தான் ஆயுத தயாரிப்பு ஆலையின் குறியீடு
x
குளத்துப்புழா அருகே சாலையோரம் உள்ள தோட்டத்தில் 14 தோட்டாக்களுடன் பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை பரிசோதனை செய்ததில்,12 தோட்டாக்களில் பி.ஓ.எஃப். என பொறிக்கப்பட்டிருந்தது. இது, பாகிஸ்தான் ஆயுத தயாரிப்பு ஆலை என்பதன் சுருக்கப் பெயர். இதனால், அவை பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

7 புள்ளி 62 எம்.எம். அளவுள்ள அந்த தோட்டாக்கள்  
1980ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 12 தோட்டாக்கள் எந்திர துப்பாக்கியிலும், 2 தோட்டாக்கள் சாதாரண துப்பாக்கியிலும் பொருந்தக் கூடியவை. இது தொடர்பான வழக்கு, தீவிரவாத தடுப்பு படை போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்