டிரம்பை சந்திக்க அனுமதி கோரும் தீவிர ரசிகர் : உருவ சிலை அமைத்து தினமும் பூஜை

இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க, ஐதராபாத்தை சேர்ந்த அவரது ரசிகர் ஒருவர் அனுமதி கேட்டுள்ளார்.
டிரம்பை சந்திக்க அனுமதி கோரும் தீவிர ரசிகர் : உருவ சிலை அமைத்து தினமும் பூஜை
x
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணா புஷா. அமெரிக்க அதிபர் டிரம்பின் தீவிர ரசிகராக மாறிவிட்ட அவர், தனது வீட்டின் அருகே டிரம்பின் முழு உருவ சிலையை அமைத்துள்ளார். தினமும் சிலைக்கு அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து, மலர்களால் பூஜை செய்து வரும் அவர், இந்தியா வரும் டிரம்பை சந்திக்க ஆர்வம் காட்டி வருகிறார். டிரம்பை சந்திக்கும் தனது கனவை நிறைவேற்றி தருமாறு, பிரதமர் மோடிக்கு அவர், வேண்டுகோள் விடுத்துள்ளார். டிரம்ப் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று வெள்ளிக்கிழமை தோறும் உண்ணாவிரதம் இருப்பவர் கிருஷ்ணா புஷா என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்